Tuesday, 28 January 2025

elupputh- thOlmayir 400 - 477

 

400 - 477 எலுப்புத் தோல்மயிர் - சிதம்பரம்

 

நோய்கள் கலந்த இந்த உடல் 

நிலையானது என நினைத்துத்

திரியும் நான், உன் திருவடிகளைப் 

பெற அன்பைத் தருவாய்.

கடலும் சூரனும் மலையும் 

தூளாகச் செய்த வேலனே,

சராசரம் இரண்டிலும் கலந்தும்,

அவைகளை ஆட்டுவித்தும்,

பூஜை செயும் எங்கள் அன்னை 

பார்வதியின் பக்கம் இருப்பவரும்,

ராவணன் கயிலாயமலையை அசைக்க,  

அவன் உடலை கீழே விழச்செய்த 

சிவசம்புவின் குமாரனே,

வள்ளியை அணைத்து 

புலியூர் எனும் சிதம்பரத்தில்

வடக்குக் கோபுரவாசலில் 

வீற்றிருக்கும் பெருமாளே.

 



No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...