Thursday, 30 January 2025

kattimuNdakara pAli 402 - 479

 

402 - 479 கட்டிமுண்டகார பாலி - சிதம்பரம்

 

சிவபதவி கைக்கூடிநிற்க,

பிறவித் துன்பம் நீங்க,

தூய முத்தி கூட,

வேத சந்தத்துடன் 

உன் திருப்புகழைப் பாடுவேனோ.

எட்டும் இரண்டும் பத்து எனத் தெரியாத

என் காதுகளில் 

அகார உகார மகார இலக்கணத்தை

உபதேசித்த முருகனே,

அசுரர்கள்மேல் வேலைச் செலுத்தினவனே,

செட்டிவேடத்தில் சிவகாமிக்கு 

வளைகள் அடுக்கி

விலைகூறின எந்தை சிவனுக்கு

பிரணவப் பொருளை உபதேசித்தவனே,

செட்டிவேஷத்தில் நீ சென்று

வள்ளியை அபகரித்து வந்து

சிதம்பரத்தில் விளங்கும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...