310 - 370 சூதினுண ஆசைதனிலே - பொதுப் பாடல்
பிரமனால் எழுதப்பட்ட
விதிப்படி யமன் வரும்நேரம்,
ஆதிமுருகா என நான் கூற,
,ஆதிமுருகா, எனக்கு
அந்த ஞாபகத்தைத் தருவாயே.
க்ரௌஞ்சகிரி பொடிய,
அசுரர்கள் பயந்து ஓட,
போர் புரிந்தவனே,
ஒம் நமசிவாய எனும்
பஞ்சாக்ஷரத்துக்கு
ஏற்ற குருவாம் சிவபிரான்
உன்னை வணங்கும்படி ஆன யோகமூர்த்தியே,
பார்வதி மகிழும் குழந்தையே,
தலைவனே, ரகுராமனின் முருகனே,
அடியார்கள் உள்ளத்தில் உறைபவனே,
தேவயானையின் கணவனே,
தேவர்கள் விண்ணுலகம் பெற அருளியவனே.
No comments:
Post a Comment