Tuesday, 21 January 2025

pakira ninaivoru 330 - 393

 

330 - 393 பகிர நினைவொரு - பொதுப் பாடல்

 

மற்றவர்களோடு பகிர்ந்து உண்ணாதவன்,

திருத்தலங்களுக்கு போகாதவன்,

ஆணவத் திமிர் உள்ளவன்,

இப்படியான நான் சிவபதம் அடையக்கூடிய 

ஒருநாளும் உண்டோ.

கடல் ஓலமிட்டு, 

ராவணனை வென்ற ராமனும்,

குருநாட்டைச் சேர்ந்த பாண்டவர்களுக்கு 

தூதனாகச் சென்ற கண்ணனும்,

கஜேந்திரன் ஆதிமூலமே என ஓலமிட 

வந்து உதவிய வரதராஜனும்,

பிரகலாதனின் குரல் கேட்டு 

இரணியனது உடலைப் பிளந்த நரசிமமமூர்த்தியும்,

சக்ராயுதத்தை ஏந்தினவனும்,

காளிங்கன் மேல் நடனம் செய்யும் கண்ணனும்,

ஆகிய திருமாலின் மருகனே,

அடியார்களின் இருவினைகளும் விலக்க அருள்பவனே,

உலகத்தை ஒரேநொடியில் 

சுற்றிவந்த பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...