Thursday, 30 January 2025

kAyamAyavIdu mIRiya 404 - 481

 

404 - 481 காயமாயவீடு மீறிய - சிதம்பரம்

 

மாயமான இந்தவீடு, 

நீர்க்குமிழி போன்றது,

இதில் உழலாமல் வேதம் கீதம் 

அறிவு மௌனம் ஞானம் இவை வர

பேரின்ப முத்தியைத் தரமாட்டாயோ.

சூரன் சிங்கமுகன், 

தாரகன் இவர்கள் சிதறி அழிய 

வேலை எறிந்தவனே,

வள்ளியை காதலித்தவனே,

தேவயானையை மணந்தவனே,

வேத கீதங்களையும் 

ஏழிசைகளையும் பாட,

பஞ்சாக்ஷர மந்திரம் முழங்க 

விளங்கும் ஜோதியே,

ஆதிநாதர் ஆடும் சிதம்பரத்தில் 

வீற்றிருக்கும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...