366 - 434 படிறொழுக்கமும் - காஞ்சீபுரம்
தீயவழிகளில் போனதால்
தரித்திரம் என்னைச் சுட்டுப்பொசுக்க,
இந்த கேவலமான வாழ்வு நீங்கி
நரகத்தில் நான் விழாதிருக்க,
என் இருவினைகளையும் ஒழிக்க
உனது திருவடிகளை தந்தருள்வாய்.
வள்ளியை அணிந்தவனே,
காஞ்சீபுரத்தில் வீற்றிருப்பவனே,
அழகனே, திரிபுரத்தை எரித்த சிவனின் குருநாதனே,
அசுரர்களுடன் போர் செய்த பெருமாளே.
No comments:
Post a Comment