299 - 357 காதி மோதி வாதாடு - பொதுப் பாடல்
எதிர்த்துப் பேசி வாதாடுபவரும்,
பொருளை ஒருவருக்கும் கொடாதவர்களும்,
உன்னை நினைத்து
உள்ளம் உருகாதவர்களும்,
யம தர்மபுரியில் போவார்கள்.
இசை வடிவத்தோனே,
சிவனின் உள்ளத்தில் வீற்றிருப்பவனே,
எல்லா உலகங்களுக்கும் உரிமைக்காரனே,
வேலாயுதனே,
சேவலைக் கொடியாகக் கொண்டவனே,
தேவாதி தேவர்களுக்குப் பெருமாளே.
No comments:
Post a Comment