Monday, 27 January 2025

sivamAthudanE 387 - 462

 

387 - 462 சிவமாதுடனே - திருவருணை

 

சிவம் எனும் தலைவியுடன்,

சிவஞானம் எனும் அமுதை உண்டு,

தலைவன் தலைவி என்ற 

இரண்டும் ஒரே உருவமாகி,

எல்லோரும் வேண்டுபவர் 

இவன்தான் என அனைவரும் கூற,

இவன் இளையவன், முருகன் என வியக்க,

வேதமும் அவ்வாறு கூற,

உன்னைப்போல் விளையாட

அழகிய வேலும் மயிலும் தந்தருள்வாய்.

அசுரர்கள் மடிய, கடல் தூளாக, 

வேலை செலுத்தினவனே,

வள்ளியை அணைத்தவனே,

என் துன்பம் தீர, 

என் நோய் அகல, 

அருளிய திருவருணைப் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...