389 - 464 தமர குரங்களும் - திருவருணை
எருமையின் மீது வரும் யமன்
பாசக்கயிறை வீசி கொல்ல
வருவான்
என எல்லோரும் அழ,
வேலும் மயிலுமுடன்
வந்து நீ அருள் புரிவாய்.
இமயமகள் பார்வதியின்
ஞானப் பாலை அருந்தினவன்,
பாண்டியன் கூனை நிமிர்த்தியவன்,
சிவபெருமானுக்கு
ஞான உபதேசம் செய்தவன்,
சூரனை வென்றவன்,
சமணரை கழுவில் ஏற்றியவன்,
அடியார்களுக்கு எளிய பெருமாளே,
வள்ளியை மணந்தவனே,
திருவண்ணாமலையில்
பெரிய கோபுரத்தில் வாழும் பெருமாளே.
No comments:
Post a Comment