392 - 468 வலிவாத பித்தமொடு - திருவருணை
பலவிதமான நோய்களுடன் கூடிய
இந்த உடலை அடைந்த நான்
உன் திருப்புகழை நாவாற பாட,
சிவஞான சித்தியை தந்தருள்வாய்.
திருமால் மகிழ, சுதர்சனச் சக்கிரதை
அவருக்கு அளித்த சிவகாமியின் தலைவன்,
சித்தமூர்த்தி,
சிவபிரான் அருளிய குழந்தையே,
கடல், சூரன் க்ரௌஞ்சமலை,
சிங்கமுகன், ஆனைமுகனான தாரகாசுரன்,
மற்ற அசுரர்கள் மாளச்செய்த வேலனே,
வள்ளிதேவயானையுடன்
திருவண்ணாமலையில்
வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment