474 - 467 பேதகவிரோத தோதக - திருவருணை
என் பிறப்பும் இறப்பும் தொலைய
குறைவில்லாத ஒன்றாக
என் உயிர் விளங்க
உன் வேலாயுதத்தையும்
சேவல் கொடியையும்
தியானிக்க மாட்டேனோ.
யானை - மயில் மீது வருகின்ற
கந்தப் பெருமாளே,
சூரனுடன் போர்ச்செய்து
மண்ணுலகமும் விண்ணுலகமும்
வாழும்படி கருணை புரிந்தவனே,
உன்னை துதித்து ஞான பூஜை செய்து
பாடுகின்ற அடியார்களின் தோழனே,
திருவண்ணாமலையில் வீற்றிருப்பவனே.
No comments:
Post a Comment