439 - 158 அரிவையர்கள் தொடரும் - கனகமலை
பாவவழியிலே செல்லவிரும்பும்
புத்தியை நீக்கமாட்டேனோ.
என் மனதில் உள்ள துயரம் நீங்க,
உன்னை அன்போடு
துதித்து வணங்க அருள்புரிவாய்.
க்ரௌஞ்சமலை நடுங்க, கடல் கலங்க,
சத்தி வேலாயுதத்தைச்
செலுத்தும் இளையோனே,
அன்போடு பார்வதி கொஞ்சிநிற்க,
தண்டை ஒலிக்க வரும்
யானைமுகக் கணபதியின்
இளைய சகோதரனே,
கனககிரியில் - பொன்மலையில்
வாழும் கந்த பெருமாளே.
No comments:
Post a Comment