453 - 449 இரவியும் மதியும் தெரிவுற - திருவருணை
இந்த உலகில்
மனைவி மக்கள் உள்ளம் உருகி அழ,
என் உயிர் போகும்முன்
யான் கற்ற கலைகளும்
துயரங்களும் நீங்கிட
உன் திருவடிகளை
நான் தியானிக்க அருள்வாய்.
திருமாலும் பிரமனும்
மற்ற யாவரும் நடுங்க வந்த
சூரனை வென்றவனே,
அரிய வேதங்களில் வல்லவரும்,
தேவர்களும் உனது அடியார்களும் உய்ய
அறங்களை விரும்பச் செய்தவனே,
பார்வதியை இடபாகத்தில் வைத்த
சிவபிரான் தங்கும்
திருவருணையில் வீற்றிருப்பவனே.
No comments:
Post a Comment