Sunday, 2 February 2025

munaichchankOlidu / anichchangArmukham 436 - 047

 

436 - 047 முனைச்சங்கோலிடு / அனிச்சஞ்சார்முகம் - திருச்செந்தூர்

 

ஷடாக்ஷர மந்திரத்தை சொல்லாமல்,

மாறுபட்ட வழிகளில் திரியும் என் 

குற்றங்களையெல்லாம் பொறுத்து,

உன் பாதுகையை 

என் முடிமேல் சூடும் 

அருள் பெறுவேனோ.

கடலை அடைத்து 

இலங்கைக்குப் பாலம் கட்டி,

ராவணனுடைய 

பத்துத் தலைகளும் விழ

ஒப்பற்ற அம்பைச் செலுத்தின 

ராமனின் மருகா,

சந்திரனையும் பாம்பையும் 

கங்கையையும் தரிக்கும்

சிவபிரானின் அருளால் தோன்றியவனே,

தினைப் புனத்தில் வாழ்ந்த வள்ளியைக்

கண்டு ஆசைப்பட்ட வேலனே,

சங்குகள் நிறைந்த அலை வீசுகின்ற

திருச்செந்தூரில் எழுந்தருளிய 

தேவர்கள் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...