478 - 192 சிரம் அங்கம் அம் கை - வள்ளிமலை
இந்த உயிர் அழிவதற்குமுன்,
தீவினை தொலைய, நல்வினை சேர,
உனது திருவடியை தந்தருள்புரிவாய்.
பாம்பின்மேல் துயிலும் திருமாலும்,
தேவர்களும் அஞ்சும்படி
சூரன் மார்பை பிளந்த வேலனே,
வள்ளிமலைக்கு வந்து
குறப்பெண் வள்ளியை
கும்பிட்ட பெருமாளே.
No comments:
Post a Comment