446 - 317 குரைகடல் உலகினில் உயிர்கொடு - வேப்பூர்
துன்பங்கள் எவையும் இல்லாமல்,
விரோதமில்லாத மனப்பான்மை வரவும்,
இருவினைகள் நீங்கவும்,
ஞானிகளுக்கு மட்டும்
கிடைக்கக்கூடிய அருள் தரவேணும்.
க்ரௌஞ்சமலை, பிளவுபட,
பிரமன் கலக்கம் அடையவும்,
அசுரர்கள் மனையவர் மாளவும்,
இந்திரன் அமராவதி வாழ்வு பெறவும்,
கடலில் நெருப்பெழ
வேலை செலுத்தினவனே,
செழிப்பான வயல்கள் உள்ள
வேப்பூரில் அமர்ந்த பெருமாளே.
No comments:
Post a Comment