442 - 183 கருவாம்பரி தேர்திரள் - வரிசேர்ந்திடு - திருவேங்கடம்
யானைப்படையும்
குதிரைப்படையும்
தேர்படையும்
சேர்ந்த துரியோதனராதிகள்
அழிய, பாரதப் போரில்
பாண்டவர்களுக்கு தேரோட்டியானவன்,
சுதர்சன சக்ரத்தை உடையவன்,
கோதண்டவில்லை எடுத்து
ராவணனை கொன்றவன்
ஆகிய திருமாலுக்கு மருகனே,
சோலைகள் சூழ்ந்த
திருவேங்கடம் எனும்
திருமலையில் வீற்றிருக்கும் பெருமாளே,
எனது தனது என்பது அற,
மும்மல விகாரங்கள் அழிய,
உன் திருவடிகளை அருள்வாய்.
No comments:
Post a Comment