470 - 447 அழுதும் ஆ ஆவென - திருவருணை
அழுதும் தொழுதும் நெகிழ்ந்தும்
அமைதியற்ற சமயவாதிகளுக்கு
அறியமுடியாத ஞான மெய்ப்பொருளை
நான் அடையாமல்,
பிறவிக்கடல் எனும் சுழியில்
போய் விழுவேனோ. சொல்லி அருளுக.
பழைய கங்கை எனும்
சரவணப் படுக்கைமேல்
குமாரர்களாய் தோன்றி,
கார்த்திகை மாதர்களின் பாலை உண்ட
அறுமுகக் குழந்தையே,
திருவண்ணாமலைப் பரமனே,
மயில்வாகனனே, ஞானமூர்த்தியே,
க்ரௌஞ்சமலை பொடிபட,
கடல்களும் வேதங்களும் கோகோ எனக் கதற,
வேலாயுதத்தைச் செலுத்தின பெருமாளே.
No comments:
Post a Comment