Monday, 3 February 2025

vattavAttana manaichchi 463 - 142

 

463 - 142 வட்டவாட்டன மனைச்சி - திருத்தணிகை

 

என் மனைவி, மக்கள், 

தாயார், மற்ற உறவினர்,

இவை நீங்க யமதூதர்கள் 

என்னை அணுகுமுன்

முத்துவீட்டை அணுகவும்,

ஞானியர்போல் என்னை ஆக்கவும்

உன் திருவடிகளை தந்தருள்வாய்.

ஐராவதமெனும் யானை வளர்த்த 

தேவயானையின் மணாளனே,

வேடுவர் குலத்தில் வந்த 

வள்ளியின் தலைவனே,

க்ரௌஞ்சமலையும் 

ஏழு குலகிரிகளும் நடுங்க

வேலை செலுத்தியவனே,

உன்னை துதியாதவர்களுக்கு 

அரிதான முத்தனே,

தமிழ் பாக்களால் போற்றுபவர்களுக்கு

எளிய பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...