001 - 001 கைத்தல நிறைகனி - விநாயகர் ஸ்துதி
அடியார்கள்
மனதில் வாழ்பவன்,
கேட்டதை
அளிக்கும் கற்பக விருக்ஷம்,
சிவனாரின்
மகன், மற்போருக்கு தோளுடையவன்,
மதயானையை ஒத்தவன்,
மத்தள வயிறை உடையவன், பார்வதியின் மகன்,
இயல், இசை, நாடகம் எனும்
முத்தமிழ் நூலை மேரு மலையில் எழுதினவன்,
திரிபுரங்களை எரித்த சிவபிரானுடைய
ரதத்தின் அச்சை பொடியாக்கினவன்,
தினை புனத்தில் யானையாக வந்து
வள்ளியை அத்தருணத்திலேயே
முருகனுக்கு மணம் செய்வித்தவன்,
கரத்தில் உள்ள பழம், அவல், பொரி இவைகளை
உண்ணும் யானை முகக் கடவுள், ஆன
கணபதியை
புது மலர்கள் கொண்டு வணங்குகிறேன்.
No comments:
Post a Comment