006 - 006 உனைத்தினம் தொழுதிலன் - திருப்பரங்குன்றம்
அசுரர்களோடு போர் செய்த வேலவனே,
வள்ளியை அணைந்தவனே,
தேவர்களும் முனிவர்களும்
செய்யும் பூசையில் மகிழ்பவனே,
திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் பெருமாளே,
நான் உன்னை தினமும் தொழுவதில்லை,
உன்னைக் குறித்து உரைப்பதில்லை,
உன்னை பூசிப்பதில்லை,
உன்னை பணியவில்லை,
ஒரு தவமும் செய்யவில்லை,
உன் அன்பர்கள் இருக்கும் இடம் அறிவதில்லை,
உன் மலையை வலம் வருவதில்லை,
இவ்வாறு இருந்தும், யமன் வரும்போது,
என் பயம் அகல, அஞ்சேல் எனக்கூறி
மயில்மீது வருவாயே.
No comments:
Post a Comment