011 – 011 அந்தகன் வருந்தினம் - திருச்செந்தூர்
சாத்வம், ராசதம், தாமதம் எனும்
மூன்று குணங்களும் அழிய,
ஐம்பொறிகளால் வரும் துன்பங்களை அறுக்க
உன் பெருமையைப் பாடி ஞானம் பிறக்க,
உண்மையான அறிவு வர,
எப்பொழுது உன்னை காணும்
பாக்கியத்தைப் பெறுவேனோ.
இந்திரன், அவன் ஊரான அமராவதியைப் பெற,
அரக்கர் மாள, கிரௌஞ்சமலை பொடிபட,
அழகிய சங்கரி மனம் நெகிழ,
அவளுக்கு முத்தம் தர
சிறு சதங்கைகள் ஒலிசெய்திட வரும் பெருமாளே.
No comments:
Post a Comment