015 – 015 அறிவழிய மயல் பெருக - திருச்செந்தூர்
என் மனைவியும் அன்னையும் உறவினரும் அழ,
யமன் என்னை அழைத்துச் செல்லாதபடி,
என் இருவினைகளும் ஐம்புலன்களும் ஒழிய,
உன் திருவடிகளை அணுக, எனக்கு வரம்தருவாய்.
சிவனுக்கு ஒப்பான அகத்தியருக்கு தமிழை ஓதினவனே,
தேவர்களுக்குத் துன்பத்தை உண்டாக்கின
சூரனின் மார்பில் வேலை செலுத்தினவனே,
பார்வதி பரமசிவன் மடியில் வளரும் குமரனே,
திருச்செந்தூரில் அமர்ந்த பெருமாளே.
No comments:
Post a Comment