Thursday, 5 December 2024

aruNamaNi mEvu bhUshitha - 013 - thiruchchenDUr

 

013 – 013 அருணமணி மேவு பூஷித - திருச்செந்தூர்

 

தப்பான வழியில் போயி

இந்த பூமியில் நான் இறக்காமல்,

உன் அடிகளைப் பாடி வாழ்வுற

என் நெஞ்சிலே உபதேசப் பொருளை அருள்வாயே.

வேதங்களுக்கு ஆதி பொருளான 

சிவனார் தந்தருளிய முருகனே,

கார்மேக வரண்ணமுடையவரும்,

உலகம் முழுவதையும் உண்டவரும்,

கஜேந்திரனுக்கு மோக்ஷம் அருளியவருமான

மாயனாம் திருமாலின் மருகனே,

சூரனின் மார்பிலும் க்ரௌஞ்சமலையிலும் 

வேலை செலுத்தினவனே,

செய சரவணனே,

மனதுக்கு இனியவனே,

திருச்செந்தூரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.



No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...