Friday, 6 December 2024

Evinai nErvizhi - 017 - 020 - thiruchchenDUr

 

017 - 020 ஏவினை நேர்விழி - திருச்செந்தூர்

 

தப்பான வழியிலே சென்ற எனக்கு

ஒப்பற்ற வாழ்வைப் (முத்தியைப்) பெற 

உதவும் ஒருநாள் உண்டோ.

புலவர்கள் பாடிய நூல்களில் புகழப்பட்ட,

நாரதமாமுனிவர் வருணித்த

குறப்பெண் வள்ளியை 

காட்டிலே சென்று கூடிய வீரனே,

மயில்வாகனனே,

தேவி மனோன்மணி அன்னை

பராபரை உமையின் சிறுமகனே,

சோலைகள் நிறைந்த 

திருச்செந்தூரில் அமர்ந்த பெருமாளே.

 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...