Wednesday, 11 December 2024

thOlodu mUdiya 028 - 035

 

028 - 035 தோலொடு மூடிய - திருச்செந்தூர்

 

காரண காரிய தொடர்போடு வரும்

இவ்வுலகத்து துன்பங்கள் நீங்க,

உண்மை ஞானமாகிய தபநிலை 

என்னை வந்தடைய அருளாயோ.

படைக்கும் தொழில் செயும் பிரமனை

தலையில் குட்டி தண்டித்தவனே,

அனுமானின் தோளில் இருந்து

ராவணனுடைய தலைகள் சிதறச்செய்து,

உத்தமனாம் விபீஷணன் வாழ்வுறச்செய்து,

சீதையை மீண்ட ராமனுக்கு இனியவனே,

நல்ல குணங்கள் நிறைந்த நாரதர்

வள்ளியைக் குறித்துச் சொல்ல,

அவளை மணந்தவனே,

மீன்கள் துள்ளிவிளையாடும்

திருச்செந்தூரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே.




No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...