Wednesday, 11 December 2024

nAlum ainthu vAsal kIRu 029 - 036

 

029 - 036 நாலும் ஐந்து வாசல் கீறு - திருச்செந்தூர்

 

பலவிதமான பிணிகளுடன் உள்ள

துன்ப வாழ்வை அடையாமல்,

நீ என் அறிவில் கலந்து,

ஞான சாத்திரங்களை உணரக்கூடிய 

வாழ்வைத் தருவாயே.

மார்க்கண்டேயனுக்கு மோக்ஷம் அருளிய ஆதிமுதல்வரும்,

மன்மதனை எரித்தவரும், நீலகண்டனுமான

சிவனுக்கு பிரணவத்தின் பொருளை உபதேசித்தவனே,

பாற்கடலில் பள்ளிகொண்டவரும்,

கஜேந்திரனுக்கு மோக்ஷம் அளித்தவரும்,

சக்கிராயுதத்தை கையில் ஏந்தினவருமான

திருமாலின் மருகனே,

வேதங்கள் உன்னை துதிக்க

திருச்செந்தூரில் வாழ்கின்ற சேவற்கொடியோனே.




No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...