Wednesday, 11 December 2024

niDhikkup- pingalan 030 - 037

 
030 - 037 நிதிக்குப் பிங்கலன் - திருச்செந்தூர்

 

செல்வத்துக்குக் குபேரன்,

நற்பதவிக்குத் தேவேந்திரன்,

அழகுக்குக் கந்தன்,

என்று செல்வந்தர்களிடம் சென்று

கவி பாடுவதை விட்டு, 

உன் திருவடியைச் சேர அருள்வாய்.

திரிபுரத்தை எரித்தவர்,

சபையில் ஆனந்த நடனம் புரிந்தவர்,

கையில் மழுவை ஏந்தினவர்,

ஆன சங்கருக்கு குருவாய்

தமிழில் வேதப் பொருளை ஓதினவனே,

திருச்செந்தூரின் செல்வமே,

குறவர்குலப்பெண் வள்ளியை கும்பிட்ட பெருமாளே.




No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...