Thursday, 12 December 2024

nilaiyAp- poruLai 031 - 038

 

031 - 038 நிலையாப் பொருளை - திருச்செந்தூர்

 

நிலையில்லாத பொருட்களை

பொன்னாகக் கருதி நாட்களை வீணாக்கி,

செவிடாகி குருடாகி,

நோய்கள் மிகுந்து,

ஐம்பொறிகளால் தடுமாற்றம் அடைந்த எனக்கு

வேதங்களால் போற்றுதற்கு அரிதான

நின் பாதங்களை தந்தருள்வாய்.

அசுரர்கள் அழிய, கடல் வற்ற,

மாமரவடிவில் வந்த சூரன்மேல்

எரிவீசும் வேலை செலுத்தினவனே,

திருச்செந்தூரில் கடற்கரையில் இருக்கும் குமரனே,

பரிசுத்தவடிவில் உள்ள சிவனாருக்கு

ஓம் எனும் பொருளை விளக்கினவனே,

அடியார்க்கு எளிய பெருமாளே.

 

 


No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...