Thursday, 9 January 2025

iravodum pakalE 281 - 337

 

281 - 337 இரவொடும் பகலே - பொதுப் பாடல்

 

இந்த உலகில் பிறந்து, வளர்ந்து, 

வயதாகி, வாழும் நான்

என் துன்பம் நீங்கி விடிவது எப்போது. 

நான் மோக்ஷம் பெறாமலே 

அழிந்து போவேனோ.

திருநடனம் செய்பவள், 

திருநீறு அணிந்தவள்,

துர்கை, மாகாளி, அபிராமி, 

சிவனின் இடப்புறம் அமர்பவள்,

நீல நிறத்தவள், சூலி, ஆயி, 

மகமாயி, சிவாம்பிகை, பாலாம்பிகை,

ஆன பார்வதி அருளிய குழந்தையே,

மலைகளை காத்து மலைகளில் வாழ்பவனே,

திருவடி செல்வதை உடையவனே,

வள்ளியின் இனிமையான மணவாளா,

திருமால், சிவன், பிரேமா, 

இந்திரன், கந்தர்வர், 

பிற எல்லா வகையருக்கும் பெருமாளே.


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...