Thursday, 2 January 2025

nirAmaya purAthana 169 - 201

 

169 - 201 நிராமய புராதன - விராலிமலை

 

நோயில்லாததும், பழமையானதும்,

வரத்தைத் தருவதும்,

அழிவற்றதும், ஆசையற்றதும்,

புன்னகையால் திரிபுரத்தை 

எரித்தவரான சிவபிரானும்,

மற்ற தேவர்களும் போற்றும் 

உன்னை நினையாமல், 

பாவிகளுடன் நான் சேரலாமோ.

ராவணனை வென்ற,

ரகுவம்சத்தில் பிறந்த ராமனின் 

கண்ணை மலராகக் கொண்ட 

சிவபிரானின் திருக்குமரா,

கலைகளுக்குத் தலைவனே,

விநாயகருக்குத் தம்பியே,

தேவர்கள் அதிபதியே,

திருப்போரூரில் உறைபவனே,

விராலிமலையில் வாழும் பெருமாளே.

 

 


No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...