175 - 208 சுருதி மறைகள் இருநாலு - உத்தரமேரூர்
வேதங்களினாலும் உபநிடங்களாலும்
எட்டு திக்பாலர்களாலும் தேவாதி தேவர்களாலும்,
சூரியன் சந்திரன், அக்னி, என மூன்று சுடர்களும்,
திருமால், பிரமன் முதலியவர்களாலும்
அறியமுடியாத உன் திருவடிகளை
அடியேன் அறிந்துகொள்ளவல்ல
அறிவு அருள்வாய்.
மலைகள் பொடிபட, சூரனும் அழிய,
யமனும் அச்சுற்று உன்னை துதிக்க,
மயிலில் ஏறி வந்த வேலாயுதனே,
உத்தரமேரூரில் வீற்றிருக்கும்
தேவர்கள் பெருமாளே.
No comments:
Post a Comment