Wednesday, 11 December 2024

kombanaiyArkAthu - 021 - 027

 

021 - 027 கொம்பனையார் காது - திருச்செந்தூர்

 

இந்த உலகமாயையில் மயங்காமல்,

உன் புகழையே நான் பாடி,

இனி அன்புடன் ஆசாரமான பூசை செய்து

என் வாழ்வு வீணாகாதபடி அருள்புரிவாய்.

நடனம் ஆடும் சங்கரி,

சிவகணங்களுக்குத் தலைவி,

சூலத்தை ஏந்தினவள்,

குற்றமில்லா கருநீல நிறத்தவள்,

வன துர்கை, பயத்தைத் தருபவள் / போக்குபவள்,

காலி, யோகத் தலைவி,

சூரனை அழிக்க வேலாயுதத்தைத் தந்தவள்,

அவளிடம் இருந்து வேலைப் பெற்ற மூர்த்தி,

வயலூரா, விசாக பெருமாளே,

திருச்செந்தூரில் வீற்றிருப்பவனே,

என்னை உய்விக்கும்படி அருளும் பெருமாளே.




No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...