Wednesday, 11 December 2024

thantha pasithanai aRinthu 025 - 031

 

025 - 031 தந்த பசிதனை அறிந்து - திருச்செந்தூர்

 

என் உற்றத்தார் அழுது விழ,

எருமைக் கடாவின் மேல் ஏறி

யமன் என்னை நெருங்கும்போது,

அஞ்சாதே எனக்கூறி நீ மயில் மீது வந்து,

அந்த யமனிடம், இவன் நமக்கு வேண்டியவன்,

நமது அன்பன் எனச் சொல்வாயாக.

ஹிமவானின் மகளாகிய உமாதேவியின்

பால் உண்ட வேலாயுதக் கடவுளே,

நிலவும், பாம்பும், கங்கையும், அணிந்துள்ள

சிவபெருமான் அருளியவனே,

திருச்செந்தூரில் வீற்றிருப்பவனே.




No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...