Sunday, 5 January 2025

aNdarpathi kudiyERa 192 - 230

 

192 - 230 அண்டர்பதி குடியேற - சிறுவை

 

தேவேந்திரன் குடிபுக, 

அசுரர்களை வென்றவனே,

காளியுடன் நடனம் ஆடுகின்ற சிவபிரானும்,

விநாயகனும், உமாதேவியும்.

புவியிலும் எல்லா திசைகளில் உள்ளவரும்,

இந்திரனும் பிரமனும் 

லக்ஷ்மியும் திருமாலும் மகிழ,

வலிமையான மயிலுடன் ஆடி நீ வரவேண்டும்.

தேவர்கள் வளர்த்த 

தேவயானையின் மணாளனே,

மெய்ஞ்ஞானியே, 

கடல் பொங்க மலைகள் இடிபட

வேலை செலுத்தினவனே,

நல்ல தமிழில் நேசம் கொண்டவனே,

உன் அடியார்கள் மனதில் குடிகொண்டு

சிறுவை எனும் தலத்தில் வீற்றிருப்பவனே.

 

 


No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...