191 - 229 மனமெனும் பொருள் வானறை - சிவபுரம்
ஐம்புலன்களோடும்
மற்றும் தொண்ணூற்றியொன்று
தத்துவங்களால் ஏற்படும்
இன்ப துன்பங்களை நான் செயித்து
ஞானம் பெற எனக்கு அருள்தருவாய்.
உலகங்களுக்குத் தாய், சங்கரி,
வேத முதல்வி, குற்றம் அற்றவள்,
சிவை, பராபரை, ஆன
பார்வதி
அருளிய குமரா,
தேவர்களை சிறையிலிருந்து மீட்ட,
சூரனை அழிக்க சிவபிரான் தந்த
வேலை செலுத்தினவனே,
இரணியனை தன் நகத்தால் வென்ற
நரசிங்கம் ஆன திருமாலின் மருமகனே,
எல்லா
தேவர்களும் புகழ்கின்ற அழகனே,
அஷ்ட லட்சுமிகள் நிறைந்த வீடுகளும்
தங்கத்தாலான கோயிலும்
சிறப்பாக விளங்கும்
சிவபுரம் எனும் தலத்தில் வாழும் பெருமாளே.
No comments:
Post a Comment