250 - 300 அரியயன் அறியாதவர் - வடுகூர்
திருமாலும்
பிரமனும் அடிமுடி காணமுடியாதவர்,
திரிபுரத்தை
சிரித்தே எரித்தவர்,
கங்கையை
தலையில் சூடி,
நெருப்பையும்
மழுவையும் கையில் ஏந்தி
மலைமகளை
இடபாகத்தில் வைத்தவர்,
மன்மதனை
எரித்தவர்,
ஆன
சிவபிரான் மகிழும் குமரனே,
என
கூறி உன்னை வணங்க அருள்வாய்.
க்ரௌஞ்சமலையைப்
பிளந்து
ஒப்பற்ற
மயில் மீது
உலகை
வலம் வந்தவனே,
அசுரர்களைக்
கொன்ற வேலாயுதா,
குறப்பெண் வள்ளியை
அணைந்த வேடனே,
வடுகூரில் வாழும்
தவமுனிவர்கள் பெருமாளே.
No comments:
Post a Comment