229 - 284 எருவாய் கருவாய் - திருவீழிமிழலை
இருக்கும்போது
இவர் எனக்கூறப்படுபவர்,
இறந்துபோனபின்
அவர் ஆனார்,
அப்படியான
பிறவிச்சங்கிலியில்,
முருகா பரமா குமரா என
ஒருமுறையாவது துதிக்க,
உன்
திருவருளைத் தருவாய்.
அடியார்களை
அருள்பவனே,
முனிவர்களும்
தேவர்களும் உன்முன் ஓலமிட
சூரனை
அழித்தவனே,
திருமாலும்
பிரமனும் அறியமுடியாத
சிவபிரானின்
செல்லச் சிறுவனே,
திருமாலின்
மருகனே,
திருவீழிமிழலையில்
வாழும் பெருமாளே.
No comments:
Post a Comment