202 - 240 ஏட்டின் விதிப்படியே - திருக்கடவூர்
விதிப்படி இந்த உடலில் உயிரைச் சேர்த்து,
நான் தடுமாறி காலம் கழித்து,
இறக்கும் சமயத்தில்
கால்களில் பாம்பைக் கட்டியுள்ள
மயிலில் அமர்வோனே,
நீ அருள்புரிவாய்.
அரக்கு மாளிகையில் பாண்டவர்களை
இருக்கச்செய்து நெருப்பிட்டு,
துரியோதனன் சூதாட்டத்தில்
அவர்களைத் தோற்கடித்து,
விதிப்படி அவர்கள் மாறுவேடம் தரித்து
வனவாசம் செய்து முடிந்தபின்
பாரதப்போரைத் துவக்கிவைத்த
திருமாலின் மருகனே,
கோட்டைகளை அழித்து
சூரனுடைய மகேந்திராபுரியை
எரித்த அழகனே,
கூரிய வேலாயுதனே,
யமனை உதைத்த பார்வதிக்கும்
வள்ளிக்கும் உரிய தலைவனே,
திருக்கடவூரில் வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment