203 - 242 சுருதியாய் இயலாய் இயல் - திருக்குடவாயில்
வேதமாய், இயல் தமிழாய்,
தருமமாய், நல்லொழுக்க வழியாய்,
ஞானிகள் அனுபவிக்கும் சுகப் பொருளாய்,
மேகமாய், மழையாய், சூரியனாய், சந்திரனாய்,
ஆகாய வெளியாய் ஜோதியாய்,
பகலும் இரவும் இல்லாததாய்,
மாயையின் உண்மைத் தத்துவத்தை,
எவரும் அறிய முடியாததை,
நீ குருவாக வந்து (அதை உலகுக்கு)
எடுத்து ஓதுமாறு (எனக்குத்) திருவருள் புரிந்தாய்.
(இந்த பாக்கியம்) நான் முற்
பிறப்பில் செய்த தவத்தின் பயன் தானோ?
சீகாழிப்பதியின் கவுணிய குல அந்தணனாகி,
பார்வதியின் மார்பில் சுரந்த பாலைப்
பருகிய ஞானசம்பந்தனாகி),
வாதத்துக்கு வந்த சமணர்கள் கழுவில் ஏறவும்,
பாண்டிய மன்னனின் கூன்பட்ட உடல் நிமிர்ந்து விளங்கவும்,
திருக்குடவாயில் என்னும் பெரிய நகரில்
வாழ்வு கொண்டு வீற்றிருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment