200 - 238 ஒருவழி படாது மாயை - சோமநாதன்மடம்
மாயையும் இருவினைகளும்
ஒருநிலையில் நிற்க முடியாதபடி
வாட்டும் அடியேனுக்கு
இரவும் பகலும் கடந்த
சிவஞானமான மௌன உபதேசத்தை,
என் உட்பகை புறப்பகை
யாவும் ஒழிய அருள்வாய்.
தேவியை ஒருபாகத்தில் கொண்ட
அருணாசலேசுரர்க்கு பூசை செய்த
சோமநாதனுடைய ஊரில்
வீற்றிருக்கின்ற முருகனே,
சூரன் அழியவும், மேருமலை பொடிபடவும்
கடல் வற்றவும் கோபித்தவனே,
உன்னை துதிக்கும் அடியார்கள்
கோடி குறை கருதி
உன்னிடம் முறையிட்டாலும்,
அவர்களை கோபித்து என்பதே
அறியாத தேவர் பெருமாளே.
No comments:
Post a Comment