194 - 232 பிறவியான சடமிறங்கி - சிறுவை
இந்த பிறவியில் தப்பான வழிகளில் போயி,
அந்த வினைகளால்
வேதனையுற்று அழிந்துபோகாமல்,
உன் நினைவு என்னைவிட்டு நீங்காமல்
எல்லோரும் வணங்குகின்ற
உன் தெரிசனம் நான் பெறுவேனோ.
ஐம்பொறிகளில் அகப்படாத நக்கீரர்
குகையில் அடைபட்டபோது
அங்கிருந்த ராக்ஷசனிடம் இருந்து காப்பாற்றி
திருமுருகாற்றுப்படை எனும்
தமிழ் மாலையை புனைந்த
மயில் வாகனனே,
சிறுவரான லவ குச எனும்
ராமரின் புதல்வர்கள்
தந்தையிடம் எதிர்த்துப் போர்செய்து
வெற்றிபெற்ற குபேரபட்டினம்
போல் விளங்கும்
சிறுவையில் வீற்றிருப்பவனே.
No comments:
Post a Comment