195 - 233 ஊனத்தசை தோல்கள் சுமந்த - சீகாழி
பிரமனால் தரப்பட்ட
அழிந்து போகக்கூடிய
இந்த உடலை விரும்பி,
அதனால் உண்டாகும் பிணிகள் நீங்கி
உன் திருவடிகளை வணங்க அருள்வாய்.
மதுரையில் தேவாரப் பாடல்கள் பாடி
சமணர்களைக் கழுவில் ஏற்றி,
திருநீறு அளித்து பாண்டியனது
சுரநோய் தீர அருளிய குருநாதனே,
வள்ளியைக் காண காட்டிற்கு போயி,
வேங்கை மரமாக நின்று
அவளை மணந்து
சீகாழியில் மகிழ்ந்திருக்கும் பெருமாளே.
No comments:
Post a Comment