Sunday, 5 January 2025

saruvi ikazhnthu maruNdu 196 - 234

 

196 - 234 சருவி இகழ்ந்து மருண்டு - சீகாழி

 

மதப் போராட்டத்தில் 

இகழ்ந்தும் கோபித்தும் வரும் சமயவாதிகளும்,

நாத்திகர்களும் கலங்க,

எல்லோரும் விரும்பத்தக்க தந்தத் 

தமிழ் பாடல்களையும்

வெற்றியையும் 

சரவணப் பொய்கையையும்

உனது வேலையும் திருவடியையும்

நீ வள்ளியை மணந்து நின்றதையும் போற்றி

உன்னை நான் என்றும் மறக்கமாட்டேன்.

ராவணனை அழித்த திருமால்,

கஜேந்திரனுக்கு உதவிய மேகவர்ண்ணன்

லக்ஷ்மியின் கணவன்

சீரங்கத்தில் பள்ளி கொண்டவன்,

சடகாசுரனை வென்றவன்,

வரதன், வாமனன், 

கடல் கொந்தளிக்க அம்பைத் தொடுத்தவன்,

ஆன திருமாலின் மருகனே,

இந்திரன் தவம் செய்த 

பிரமபுரம் எனும் சீகாழியிலும்

அடியார்கள் மனதிலும் வீற்றிருப்பவனே


 

 

No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...