197 - 235 தினமணி சார்ங்க பாணி - சீகாழி
இன்பமயமாக இறுமாப்புடன் வாழ்கின்ற
நல்வினை தீவினை இரண்டிற்கும்
கட்டுப்பட்ட இந்த உடல்
ஒருபிடி சாம்பலாக அழிந்துபோகலாமோ.
காட்டில் திரியும் வேடர்கள் அதிசயிக்க
வேங்கை மரமாக தோன்றிய
மாய வடிவத்தோனே,
சமணர்கள் உன்னிடம் தோற்று
கழுமுனையில் தொங்க,
திருநீறு பாண்டியநாட்டில் பரவ,
தேவாரப் பாடல்களைத் தந்தவனே,
கழுமலம், பூந்தராய் எனும்
சீகாழியில் வீற்றிருப்பவனே,
கவுணியர் குலத்தில் வந்த அரசனே,
தேவர் பெருமாளே.
No comments:
Post a Comment