232 - 279 சொருபப் பிரகாச - திருவொற்றியூர்
பிரகாசமான
உருவத்தை உடையவனே,
விசுவ
ரூபனே, மறுபிறவி வராதபடி
உன்
திருவடிகளைப் போற்றும் கீதங்களில்
மேம்பட்டவனாகி
சிவகதியைப் பெற்று,
துன்பங்கள்
யாவையும் கடக்க மாட்டேனோ.
சேவல் கொடியோனே,
வேலாயுதனே,
திருமாலின் மருகனே,
குமரனே, குகனே,
அசுரர்கள் குலத்துக்கு
எமனாக வந்தவனே,
திருவொற்றியூரில்
ஆதிசிவன் அருளிய குழந்தையே,
மகா தபசிகளின் நெஞ்சிற்
வீற்றிருப்பவனே.
No comments:
Post a Comment