233 - 280 தவர்வாட்டோமர சூலம் - திருவோத்தூர்
பலகொலைகள்
செய்த சூரனும்,
ஏழு
கடல்களும் ஏழு மலைகளும்
காய்ந்துபோக எரித்த வேலும்,
சேவலும் மயிலும்,
தினைப்புனத்தைக்
காத்த வள்ளியும்,
தேவலோக
தேவையானையும்,
துணையாகக்
கொண்டு வாழ்கின்ற கோமானே,
உன்னை வணங்காதவர்களிடம்
சென்று நான் திரியலாமோ.
வேதத்தை படிக்காத பாதகர்கள்,
சமணர்கள், கழுவில் ஏறும்படி,
உனது தேவாரப் பாடல்களினாலும்
திருநீற்றாலும்
வாதுசெய்த இளையவனே,
முத்துக்களைக் கொட்டும்
பேயாறுக்கு அருகில்
திருவோத்தூர் எனும் தலத்தில்
வீற்றிருப்பவனே.
No comments:
Post a Comment