Thursday, 9 January 2025

vaDana sarOruka 261 - 315

 

261 - 315 வதன சரோருக - வெள்ளிகரம்

 

வள்ளியின் தினைப்புனத்தில் போய் –

திருத்தணிகையும் வள்ளிமலையும் 

இரண்டரை காதம் தூரம் –

இடையில் ஒருவயல்தான் உள்ளது,

என்னுடன் வருவாய் எனக்கூறி,

வள்ளிமீது ஆசைகொண்ட பெருமாளே,

கண்ணப்பன் கொடுத்த 

எச்சில் உணவைத் தின்று

திருவிளையாடல் ஆடிய சிவன் மகனே,

எப்போதும் இளமையுடன் இருப்பவனே,

மலைகளுக்கு உரியவனே, 

என ஓதினதினால்

நூறாயிரம் பிறப்புகள் ஒழிந்ததுவே, 

இது அற்புதம் தான்.

கௌமோதகி எனும் கதாயுதம்,

சார்ங்கம் எனும் வில்,

சுதர்சனம் எனும் சக்ரம்,

பாஞ்சஜன்யம் எனும் சங்கு,

நாந்தகம் எனும் வாள்,

ஆக பஞ்ச ஆயுதங்களை ஏந்தியவனும்,

நந்தகோபாலன் தேவி யசோதை மகிழ,

உரலை இழுத்து உலாவியவனும்,

வெண்ணை திருடுபவனும்,

மகாபலி அஞ்ச வாமனனாக வந்தவனும்,

ஆகிய திருமாலின் மகனாம் 

பிரமனை கோபித்தவனே,

வெள்ளிகரம் எனும் தலத்தில் வீற்றிருப்பவனே,

உன்னை துதிக்கும் தேவர்கள் பெருமாளே.

 

 


No comments:

Post a Comment

makkaL thAyarkkum 501 - 407

  501 - 407 மக்கள் தாய ர் க்கும் - பொதுப் பாடல்   உற்றார் உறவினர்களால்   என் மனம் சோர்வடைய , யமனும் என்னைத் தேடிவர , நான் இ...