179 - 212 விரகற நோக்கியும் உருகியும் - எழுகரைநாடு
முருகா, உன்னை துதித்து
கண்களில் நீர்வழிய
நெஞ்சுருக மொழிகுழறப்
பாடின அடியேனுக்கு பத்தி பெருக,
மற்ற சிந்தனைகள் அற,
ஞானப்பொருளைத் தரமாட்டாயோ.
உபதேசமூலமாக மோக்ஷத்தை காட்டினவனே,
பசுபதியான சிவபிரான் போற்றிய
பார்வதி பெற்றருளியவனே,
அசுரர்களையும்
க்ரௌஞ்சமலைக் கூட்டங்களையும்
வெற்றிகொண்ட வேலனே,
எழுகரைநாடு எனும் தலத்தவர் பெருமாளே.
No comments:
Post a Comment