254 - 305 அருவரை எடுத்த - வயிரவிவனம்
கயிலைமலையை
அசைக்க முயன்ற
ராவணன்
நெரிபட
விரலை
ஊன்றின சிவனின்
இடபாகத்தில் அமர்ந்த
பார்வதியின் குழந்தையே,
ராமனின்
மருகனே, ஆறுமுகனே,
பன்னிரு
கரத்தோனே,
உன்
திருவடியைத் தொழும்
அடியார்களின்
தாள்களைப் பணிந்திட
எனக்கு
ஞானத்தைத் தந்தருள்வாய்.
பிரணவத்தின்
பொருளை அவர் கேட்க,
சிவனுக்கு
அதை உபதேசித்த குருநாதனே,
தேவர்களைச்
சிறையிலிருந்து மீட்க
வேலாயுதத்தைச்
செலுத்தினவனே,
சரஸ்வதி
எனும் ஆற்றினிடத்தே
விளங்குகின்ற
வயிரவிவனத்தில்
வீற்றிருக்கும்
பெருமாளே.
No comments:
Post a Comment